பல்கலைகழக தேர்வு ரத்து செய்யப்படுகிறது, சற்றுமுன் வெளியான அதிரடி அறிவிப்பு இதோ

university exams cancelled

பல்கலைகழக இறுதியாண்டு தேர்வு ரத்து

Final year Unviersity Exams Cancelled : திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் மத்திய பல்கலைக்கழகத்தில் பயிலும் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1-ம் தேதி நடக்க இருந்த ஆன்லைன் செமஸ்டர் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. கொரோனா நோயின் காரணமாக ஊரடங்கு போடப்பட்டிருந்த நிலையில் மார்ச் 21-ம் தேதி முதல் அனைத்து கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன.இந்த நிலையில் மத்திய பல்கலைக்கழகங்களில் இறுதியாண்டு மாணவர்களுக்கு ஜூலை 1 முதல் ஜூலை 15 வரை ஆன்லைனில் தேர்வு நடத்திக்கொள்ளலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்தது.

இதனிடையே கொரோனா தொற்று பரவல் அதிகரித்து கொண்டு வருவதை கருத்தில் கொண்டு, ஜூலை 1-ம் தேதி நடக்கவிருந்த இறுதியாண்டு படிக்கும் மாணவர்களுக்கான ஆன்லைன் தேர்வுகளை மத்திய தேர்வு கட்டுபாட்டுதுறை ரத்து (Final year Unviersity Exams Cancelled) செய்யப்பட்டுள்ளது என்று திருவாரூர் மத்திய பல்கலைகழக நிர்வாகம் கூறியுள்ளது.
முந்தைய செமஸ்ட்ர் தேர்வின் மதிப்பெண் மற்றும் வருகை பதிவேடுகளின் படி சான்றிதழ் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து ஆன்லைன் வகுப்புக்களுக்கு தடைகோரியும், கண்பாதிப்பு ஏற்படும் என்பதால் , 5-ம் வகுப்பு வரை தடையும் அதற்கு மேல் உள்ள வகுப்புக்கு 2 மணி நேரமும் அனுமதிக்க கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள் ,ஜூலை 6-ம் தேதிக்கு வழக்கை விசாரிக்க ஒத்திவைத்துள்ளனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*