Nenjam Marappathillai Movie Review – நெஞ்சம் மறப்பதில்லை திரைப்படம் எப்படி இருக்கு ? பார்க்கலாமா ? முழு ரிவியூவ் இதோ

Nenjam Marappathillai Movie Review - Nenjam Marappathillai Hit or Flop ?

நெஞ்சம் மறப்பதில்லை ரிவியூவ்

Nenjam Marappathillai Movie Review : நடிகர் எஸ்ஜே சூர்யா நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் இன்று தியேட்டர்களில் வெளியாகியுள்ள திரைப்படம்தான் நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்திற்கு யுவன் இசையமைத்துள்ளார். ராம்சே என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள எஸ்ஜே சூர்யா அந்த கதாப்பாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். படத்தில் அவர் பேசும் டயலாக்குகள் மற்றும் அவரது நடிப்பு எல்லாமே அவரால் மட்டுமே இப்படி செய்ய முடியும் என நம்மை எண்ண வைக்கிறது.

தளபதி 65 படத்தின் கதாநாயகி இவர்தான், அவர் சம்பளம் மட்டும் இத்தனை கோடியா ?

அந்த அளவுக்கு தரமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். சிம்பிள் கதைதான். ஆனால் அந்த கதையை திரையில் காட்டிய விதம்தான் செல்வராகவன் என்னும் இயக்குனரின் வெற்றி என்று கூறலாம். எஸ்ஜே சூர்யா மற்றும் நந்திதா இருவரும் பணக்கார வீட்டு கணவன் மனைவியாக இருக்கிறார்கள். அங்கு வீட்டுக்கு வேலைக்கு வரும் ரெஜினா மீது எஸ்ஜே சூர்யா சபல படுகிறார். இதற்கு பின் நடப்பதைதான், காமெடியோடு த்ரில்லராக செல்வராகவன் கொடுத்துள்ளார்.

அஜித்தின் தல 61 படத்தை இவர்தான் இயக்குகிறாரா ? கசிந்த முக்கிய தகவல் இதோ

யுவனின் இசை இந்த படத்திற்கு மிகப்பெரிய பலம். பிஜிஎம் வேற லெவலில் உள்ளது. படத்தொகுப்பு தரமாக உள்ளது. ஒளிப்பதிவாளர் தன் வேலையை சிறப்பாக செய்துள்ளார். இந்த படம் இயக்குனர் செல்வராகவன் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஒரு தீனியாக அமையும் என்பதில் மாற்றமில்லை. சாதாரண கதையை கதாப்பாத்திரங்கள் தங்கள் நடிப்பால் இப்படியும் மாற்றலாம் என சாதித்து காட்டியுள்ளது இந்த நெஞ்சம் மறப்பதில்லை. இந்த படத்திற்கு நம்ம Cini Bash Rating – 3.75/5. Nenjam Marappathillai Movie Review

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*