பெண்குயின் படம் எப்படி இருக்கு ? பார்க்கலாமா ? முழு விமர்சனம் இதோ

penguin movie review

பெண்குயின் திரைப்படம் விமர்சனம்

திருமணமான கீர்த்தி சுரேஷ் ஒரு ஆண் குழந்தையுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். தன்னுடைய கணவனோடு ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்து விடுகின்றனர். ஒரு கட்டத்தில் மகன் தொலைந்து விடுகிறான். தொலைந்த மகனை ஆறு வருடங்களாக தேடுகிறார் (penguin movie review).

பின்னர் மாதம்பட்டி ரங்கராஜ் கீர்த்தி சுரேஷை பற்றி அனைத்தும் தெரிந்து கொண்டு அவரை இரண்டாவது திருமணம் செய்கிறார். தன் மகனுக்கு கீர்த்தி சுரேஷ் கூறிய கதை போலவே படத்தின் காட்சிகளும் நகர்கிறது. ஒரு கட்டத்தில் மகன் கிடைத்து விடுகிறான். உண்மையில் நடந்தது என்ன ? பின்னர் என்னெல்லாம் நடக்கிறது என்பதுதான் படத்தின் கதை.

மேலும் இதை படிங்க

கீர்த்தி சுரேஷ் ஒரே ஆளாக படத்தை சுமந்திருக்கிறார். பல இடங்களில் வித்தியாசமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் துணை நடிகர்கள் சிலரின் நடிப்பு பொருத்தமாக இல்லை. சந்தோஷ் நாராயணனின் இசை படத்திற்கு கூடுதல் பலம் என்று கூறலாம்.

ராட்சஷன் போன்று வித்தியாசமான கதைகளத்தை எடுத்து அதில் ஏறக்குறைய வெற்றி கண்டுள்ளார் இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக். சிறப்பான ஒளிப்பதிவு, சில ட்விஸ்ட், க்ளைமேக்ஸ் என ஆடியன்ஸை கவரும் விதம் படம் இருக்கிறது.

மேலும் இதை பாருங்க

சில இடங்களில் கீர்த்தி சுரேஷின் நடிப்பு ஈர்க்காமல் போனது, சில இடங்களில் இருக்கும் லாஜிக் தவறுகள், கிராஃபிக்ஸ் காட்சிகளில் கவனம் செலுத்தாமை என சில விஷயங்கள் முகம் சுளிக்க வைக்கிறது. மொத்தத்தில் குடும்பத்துடன் ஒருமுறை கண்டிப்பாக பார்க்க கூடிய (penguin movie review) நல்ல ஒரு படம்தான் பெண்குயின்.

Cini Bash Rating – 3.5/5

மேலும் இதை படிங்க

 

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*