ஜோதிகாவின் பொன்மகள் வந்தாள் எப்படி இருக்கு ? பாக்கலாமா ?

ponmagal vandhal review

பொன்மகள் வந்தாள் திரை விமர்சனம்

நடிகை ஜோதிகா நடிப்பில், இயக்குனர் ஃபெட்ரிக் இயக்கத்தில், நடிகர் சூர்யா தயாரிப்பில் வெளியாகியுள்ளது பொன்மகள் வந்தாள் திரைப்படம். இந்த படம் தற்போது சமூகத்தில் நடக்கும், பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்த கதைக்களத்தை கொண்டதாக உருவானது. ஜோதிகாவோடு இணைந்து நடிகர் பார்த்திபன், நடிகர் ப்ரதாப் போத்தன், நடிகர் பாக்கியராஜ் மற்றும் நடிகர் தியாகராஜன் இப்படி ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளனர். இந்த படம் தற்போது அமேசான் ப்ரைமில் வெளியாகி உள்ளது. பல பஞ்சாயத்துகளை தாண்டி வெளியான இந்த படம் எப்படி இருக்கிறது என்பதை இந்த விமர்சனத்தில் பார்ப்போம்.

இதற்கு முன் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை திரைப்படம் பெண்களுக்கு எதிரான, விருப்பமற்ற பாலியல் தொல்லைகளுக்கு சாட்டையடி கொடுக்கும் விதமாக வெளியானது. அதே போலதான் இந்த படத்திலும், நாம் கடந்த சில வருடங்களாக கடந்து வந்த, பெண்களுக்கு எதிரான பல பிரச்சனைகளை தோலுரித்து காட்டியுள்ளது. அதோடு அதை எல்லாமே உணர்வு பூர்வமாக ஜோதிகா தனது நடிப்பில் வெளிப்படுத்தி உள்ளார்.

மேலும் படிக்க​

வெண்பா என்னும் கதாப்பாத்திரமாக வரும் ஜோதிகா, குழந்தைகளுடன் விளையாடும் போது குழந்தையாகவும், கோர்டில் நியாயத்திற்காக வாதாடும் போது, கம்பீரமான நடிப்பையும் வெளிப்படுத்தியிருக்கிறார். அதோடு பெண்கள் அனுபவிக்கும் வலியை, தன் நடிப்பால் படம் பார்ப்பவர்களுக்கு உணர்த்தியிருக்கிறார். அந்த வகையில் இது இந்த படத்தின் மிகப் பெரிய பலம் என்றே கூறலாம்.

பார்த்திபன், பாக்கியராஜ், ப்ரதாப் போத்தன், சுப்பு பஞ்சு, தியாகராஜன் என அனைவருமே தங்களுக்கு கொடுக்கப்பட்ட கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள் என்று கூறுவதை விட வாழ்ந்திருக்கிறார்கள். அந்த அளவுக்கு தங்களுடைய எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள் என்றே கூறலாம். இதுவும் படத்திற்கு அடுத்த பலமாக அமைந்துள்ளது.

மேலும் இதை பாருங்க​

பெண் பிள்ளைகள் ஆண்களிடம் எப்படி பழக வேண்டும், ஆண்கள் பெண்களை எப்படி பார்க்க வேண்டும், எப்படி பழக வேண்டும் என்பதை மிகவும் அழகாக ஆபாசம் ஏதுமின்றி பதிவு செய்திருக்கிறார் படத்தின் இயக்குனர் ஃபெட்ரிக். கோவிந்த் வசந்தின் இசை காட்சிகளோடு நாம் இன்னும் ஒன்றிப் போக வைக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக உள்ளது.

முதல்பாதி விறுவிறுப்பாக சென்றாலும், இரண்டாம் பாதியில் சில இடங்களில் ‘இப்படியெல்லாம் நடக்க சாத்தியமா’ என சில காட்சிகளில் நம்மை நாமே கேட்கும் படியாக இருப்பது சிறு நெருடலே. ஆனாலும் இந்த நேரத்தில் இப்படி ஒரு படத்தில் நடிக்க முடிவெடுத்த அனைத்து நடிகர் நடிகைகளையும் நாம் பாராட்டியே ஆக வேண்டும். ஆண்கள் பெண்கள் என குடும்பத்துடன் கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய திரைப்படம் இந்த பொன்மகள் வந்தாள்.

Rating : 3.5/5

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*