சூரரைபோற்று படத்தின் அடுத்த பாடல் அப்டேட்டை வெளியிட்ட முக்கிய பிரபலம், என்ன சொன்னார் தெரியுமா ?

SOORARAI POTTRU SONG UPDATE

சூரரை போற்று அடுத்த பாடல் அப்டேட்

Soorarai pottru next song latest update : நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று படத்தின் அடுத்த அப்டேட்டை எதிர்பார்த்து சூர்யா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஏற்கனவே இந்த படத்திலிருந்து மாறா தீம் மியூசிக் மற்றும் வெய்யோன் சில்லி என்னும் மெலடி பாடல், மண்ணுருண்ட என்னும் குத்து பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.

இதையடுத்து இந்த படத்தின் அடுத்த இரண்டு பாடல்கள் கூடிய விரைவில் வெளியாகும் என சூர்யாவே கூறியிருந்தார். இந்த நிலையில் அடுத்த பாடலை பற்றி சில தகவல்கள் வெளியாகி உள்ளது. அதன்படி இந்த பாடலை அருண் ரஜா காமராஜ் எழுதி இருக்கிறார்.

சமீபத்தில் ஒரு பேட்டியில் இந்த தகவலை அவர் பகிர்ந்துள்ளார். அதன்படி இந்த பாடல் ஒரு பாசிடிவான பாடலாம், அதோடு பாடல் வரிகள் மோட்டிவேஷன் கொடுக்கும் விதமாக இருக்குமாம். அதோடு இளைஞர்கள் விரும்பும் வகையில் இருக்குமாம். இந்த தகவல் தற்போது வெளியாகி சூர்யா ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகளும் பாராட்டியிருக்கிறார்ள் என்பது குறிப்பிடத்தக்கது. படத்திற்கு U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. இந்த லாக்டவுன் முடித்து தியேட்டர்களில் வெளியாக இருக்கும் முதல் படம் சூரரை போற்று படமாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. கூடிய விரைவில் இந்த பாடல் (Soorarai pottru next song latest update) வெளியாக இருக்கிறதாம்.

About Cini Bash 528 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*