68 பேர் இறப்பு, கோரதாண்டவம் ஆடும் கொரோனா, இன்று எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் தெரியுமா ?

corona today cases 27/06

இன்றைய கொரோனா பாதிப்பு விபரம்

Tamil nadu Corona Virus Update Today 27/06/2020 : இன்று ஒரே நாளில் தமிழகத்தில் 3வது நாளாக 3,713 பேருக்கு தொற்று உறுதி தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 78 ஆயிரத்தை எட்டியது சிகிச்சை பலனின்றி 68 பேர் சாவு. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து ஏறுமுகமாக இருந்து வருகிறது. அன்றாடம் தொற்று புதிய உச்சத்தை தொடுகிறது. இதுவரை இல்லாத அளவுக்கு ஒரே நாளில் 3,713 பேர் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதன் மூலம் தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு 78 ஆயிரம் எட்டியுள்ளது. இது மட்டும் இன்றி சிகிச்சை பலனின்றி நேற்று 68 பேர் சாவு. தமிழகத்தில் இன்று மேலும் 34 ஆயிரத்து 805 பேருக்கு கொரோனா வைரஸ் இருக்கிறதா என்று பரிசோதனை செய்யப்பட்டு உள்ளது இதில் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் , வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களும் உள்ளனர். தமிழகத்தில் இன்று மட்டும் 2,737 பேர் டிஸ்சார்ஜ்.

இதுவரை குணமடைந்தோர் 44,094 ஆக உயர்வு. தற்போது தமிழகத்தில் (Tamil nadu Corona Virus Update Today 27/06/2020) கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 78 ஆயிரத்து 335 ஆக அதிகரித்து உள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் புதிதாக தொற்று ஏற்படவில்லை. தீவிர பாதிப்புள்ள கொரோனா நோயாளிகளுக்கு டெக்சாமெத்தசோன் மருந்தை பயன்படுத்த அனுமதியும் அளிக்கப்பட்டுள்ளது.

About Cini Bash 529 Articles
I am a Content writer & Youtuber

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*